தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து இன்று வியாழக்கிழமை தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை கொண்ட அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், மதுக்கடைகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஏதும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அதிகமான வாடிக்கையாளர்கள் கூடும் மதுபான கடைகளுக்கு எந்த விதமான பிரத்யேக கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாதது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அதிகமாக பரவும் சூழலில், மதுபான கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக எழுந்துள்ளது.