நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல முக்கிய அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலுவுக்கு இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.