கொரோனா தொற்று: பூரண குணமடைந்தார் கனிமொழி

Update: 2021-04-07 12:45 GMT

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி கனிமொழிக்கும் கடந்த 3ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்த நிலையில், கொரோனா நோயாளிகள் இறுதியாக வந்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு பிபிஇ உடை அணிந்து வந்த கனிமொழி வாக்களித்து தனது ஜனநாயக கடைமையை சிறப்பாக செய்து முடித்தார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து கனிமொழி குணமடைந்து விட்டதாகவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கனிமொழி வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News