போட்டித் தேர்வுகள் தமிழில் எழுதுபவர்களுக்கு முன்னுரிமை : ஜி.கே. மணி கோரிக்கை

போட்டித் தேர்வுகள் தமிழில் எழுதுபவர்களுக்கு, வேலை வாய்ப்பில், முன்னுரிமை வழங்க வேண்டும் என ஜிகே மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-09-04 13:02 GMT

பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி( பைல் படம்)

பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் ஜிகே மணி  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

சந்தையில் வரக்கூடிய பஞ்சுகளுக்கு ஒரு விழுக்காடு வரி குறைப்பதாக முதல்வர் விதி எண் 110 ன் கீழ் அறிவித்துள்ளார் ஒரு விழுக்காடு வரி குறைப்பு என்பது நலிந்து வரக்கூடிய நெசவாளர்கள் குறிப்பாக முதல் தொழில் வேளாண்மை, இரண்டாவது பெரிய தொழில், நெசவு நெசவாளர்கள் என்பவர்கள் நலிந்து வரக்கூடிய சமுதாயம், நலிந்து வரக்கூடிய சமுதாயத்திற்கு இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது. இதனை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறோம்

நெசவாளர்கள் வாழ்வை மேம்படுத்தக் கூடிய வகையிலும் பஞ்சு உற்பத்தியாளர்களுக்கும் பஞ்சு விற்பனையாளர்களுக்கும் தாராளமாகக் கொண்டு செல்லக்கூடிய அளவிற்கு வரி குறைப்பு வழங்கப்பட்டுள்ளது அனைத்து தரப்பினருக்குமான ஒரு வரவேற்கக்கூடிய நிகழ்வு

மனிதனுடைய மானத்தைக் காக்கும் வகையில் ஆடை கொடுத்து நலிந்து கூடியவர்கள் நெசவாளர்கள் அவர்களுக்கான இந்த அறிவிப்பினை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரவேற்கின்றோம்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை எண்ட்ரஸ் அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது அந்த அரசாணையில் ஒரு திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தார்

தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கக் கூடிய நிலையில் 20 விழுக்காடு ஒதுக்கீடு அறிவிப்பு. போட்டித் தேர்வில் தமிழில் எழுதப்பட வேண்டும் எனவும்,  போட்டித்தேர்வுகளில் தமிழில் மட்டுமே எழுதக் கூடியவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

மேலும் ஆசிரியர் வாயிலாக அனைவருமே பயின்றவர்கள், செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது ஆகவே அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News