கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா
கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகி நல்லகண்ணுக்கு கொரோனா பாதிப்பு. அரசு மருத்துவமனையில் அனுமதி.!!!;
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனாவால் பாதித்த 95 வயதான நல்லகண்ணுவுக்கு நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நல்லகண்ணு விரைவில் நலம் பெற்று அவர் வீடு திரும்ப வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்