டோக்கியோ பாராஒலிம்பிக்சில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

டோக்கியோ பாராஒலிம்பிக்சில் பதக்கங்கள் வென்ற மனீஷ் நர்வால் மற்றும் சிங்ராஜ் அதானாக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2021-09-04 08:26 GMT

பைல் படம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டோக்கியோ பாராலிம்பிக்சில் பதக்கங்கள் வென்ற மனீஷ் நர்வால் மற்றும் சிங்ராஜ் அதானா ஆகியோரைப் பாராட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி :

டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கத்தைப் பெற்றுத் தந்திருக்கும் மனீஷ் நர்வால், தனது இரண்டாவது பதக்கத்தை வென்றிருக்கும்  சிங்ராஜ் அதானாக்கும் எனது பாராட்டுகள்.

நமது பாராலிம்பிக் வீரர்களின் இந்தச் சிறப்பான வெற்றிகள் மேலும் பல திறமையாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவிடும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News