உலகின் மூத்த குடிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்..! -முதல்வர்

Update: 2021-04-13 08:30 GMT

சித்திரை முதல் நாளான நாளை (14.04.2021) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தொன்மையும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ்மொழியை பேசும் உலகின் மூத்தகுடியான தமிழ்ப் பெருமக்கள் பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.  ''தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ் பெருமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். . தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும்'' என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News