தமிழக முதல்வராக இன்று காலை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இல்லத்தில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் 10ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி மலர்ந்துள்ளது. தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த பதவியேற்பு விழா சற்றுமுன் முடிவடைந்ததை அடுத்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்தில் கலந்து கொண்டனர். இந்த தேநீர் விருந்தில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டனர்.