காவல் உதவி செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Update: 2022-04-04 09:50 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.4.2022) தலைமைச் செயலகத்தில், "காவல் உதவி செயலியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு, இ.கா., காவல்துறை இயக்குநர் (சைபர் கிரைம் பிரியர் அமரேஷ் புஜாரி, இ.கா. கூடுதல் காவல்துறை இயக்குநர் (மாநில குற்ற ஆவண பிரிவு) வினித் தேல் வான்கேடே, இடகா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆபத்துக் காலத்தில் காவல்துறையின் உதவியை உடனே பெறுவது உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்ட 'காவல் உதவி' செயலியைத் தொடங்கி வைத்தேன். தண்டனை பெற்றுத் தரும் துறையாக மட்டும் இன்றி, குற்றங்களைத் தடுக்கும் துறையாகக் காவல்துறை விளங்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இச்செயலி! என்று முதல்வர் தனது சுட்டுரையில் தெரிவித்தார். 

Tags:    

Similar News