சென்னை காவல்துறை பெண் காவலர்களுக்கு பயிலரங்க வகுப்புகள்
மன உளைச்சலை போக்க, சென்னையில் காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு, பயிலரங்க வகுப்புகள் நடைபெற்றன.;
பயிற்சியில் பங்கேற்ற பெண் காவலர்கள்.
சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு, சமநிலை வாழ்க்கை முறை (WORK LIFE BALANCE) என்ற 3 நாட்கள் சிறப்பு பயிற்சி, சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை துணை ஆணையாளர் வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இதில், பெண் நலம் குறித்து குழு பயிற்சி (Group Activities for Woman welfare) மற்றும் மனதிட பயிற்சி மற்றும் காவல்துறை வாழ்வியல் முறை, மனச்சோர்வை நீக்கும் பயிற்சி என பல தலைப்புகளில் பயிலரங்க வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் காவல் இணை ஆணையாளர் சாமூண்டீஸ்வரி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண் காவலர்களோடுஉரையாடினார்.
பெண் காவலர்கள் தங்களின் பணி சுமையை குறைக்கும் வகையில், சக பெண் காவலர்கள் பாடல்கள் பாடி, நடனமாடி மனம் மகிழ்ந்து தங்களின் மனச்சோர்வுகள் போக்கிக் கொண்டனர்.