செய்தியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் : தமிழக அரசு அறிவிப்பு

செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலன் காக்க வரும் 6-ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.;

Update: 2021-07-04 05:50 GMT

செய்தியாளர்கள் மாதிரி படம்.

சென்னை : செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலன் காக்க வரும் 6-ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, வரும் 6-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதை அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மீடியா செய்தியாளர்கள், போட்டோஃகிராபர் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News