கரும்பூஞ்சை பாதித்தவரை நேரில் சென்று நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின்
கரும்பூஞ்சை பாதித்தவரை ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று உதயநிதி ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
சென்னை: கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நபரை திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியம் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
திருவாலாங்காடு காவல் நிலைய தலைமைக்காவலர் புஷ்பராஜ். சில நாட்களாக கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்டார்.
இதனையடுத்து உடனடியாக அங்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆகியோர் புஷ்பராஜ் அவர்களை நேரில் சந்தித்து அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தனர்.
அதன் பின்னர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரும்பூஞ்சை சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து அங்கு சிகிச்சை பெற்று வருவோர்களிடம் நலம் விசாரித்தனர்.