உதயநிதி ஸ்டாலின் வெற்றி!
சென்னையில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளார்.;
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 66,302 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி. கசாசி 17,062 வாக்குகளும் பெற்றனர்.
உதயநிதி ஸ்டாலின் 49,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.