தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - அரசு உத்தரவு!
தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அமலாக்கத்துறை சிறப்பு டிஜிபியாகப் பதவி வகித்த கரன் சின்ஹா தீயணைப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை ஏடிஜிபியாகப் பதவி வகித்த ஏ.கே.விஸ்வநாதன், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஆபாஷ் குமார், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால், சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி சந்திப் ராய் ரத்தோர், அமலாக்கத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். (இந்தப் பதவி டிஜிபி அந்தஸ்தில் இருந்து ஏடிஜிபி அந்தஸ்திற்கு நிலை இறக்கப்பட்டுள்ளது).
கடலோரப் பாதுகாப்புப் பிரிவு ஏடிஜிபி வன்னிய பெருமாள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக நலன் மற்றும் மனித உரிமை ஏடிஜிபி சைலேஷ்குமார் யாதவ், சென்னை காவலர் நலன் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விரிவாக்கத்துறை ஏடிஜிபி சந்தீப் மிட்டல், கடலோர பாதுகாப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மண்டல ஐஜி சங்கருக்கு, பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சென்னை தலைமையிட டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, செயலாக்கத் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலர் ஜெயராமன் ஐஜி, சமூக நலன் மற்றும் மனித உரிமை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தானியங்கி மற்றும் கணினி மயமாக்கல் பிரிவு எஸ்.பி. வருண்குமார் மாற்றப்பட்டு, திருவள்ளூர் எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.