இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி: விப்ரோ நிறுவனத்துடன் முதல்வர் ஆலோசனை
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், விப்ரோ நிறுவனத் தலைவருடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.;
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், விப்ரோநிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜியுடன் காணொலிக் காட்சி வாயிலாக இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இச்சந்திப்பின்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல்,விப்ரோ நிறுவனத்தின் முதுநிலை ஆலோசகர் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.