தேவேந்திர குல வேளாளர் பெயரில் சாதி சான்றிதழ்: தமிழக அரசு உத்தரவு!

குறிப்பிட்ட சமுகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும்போது தேவேந்திர குல வேளாளர் என்கிற பெயரிலேயே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-03 08:18 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பட்டியல் பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திரகுலத்தான், வாதிரியார் என்ற 7 பிரிவினரையும் ஒன்றிணைத்து ஒரே சமூகமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்துவந்தது. இந்த நிலையில், இக்கோரிக்கையை மாநில அரசு ஏற்று ஆணை பிறப்பித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது குறிப்படத்தக்கது.

இந்த நிலையில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இதுகுறித்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றியது. குடியரசுத் தலைவர் ஏற்கெனவே ஒப்புதல் அளித்த நிலையில் சட்டத்திருத்தம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி, பள்ளர், தேவேந்திரகுலத்தார், காலாடி, பண்ணாடி, குடும்பர், கடையர் ஆகிய ஆறு சாதிப் பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திரகுல வேளாளர் பெயரில் சாதி சான்றிதழ் தர ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், துறைத் தலைவர்கள், அதிகாரம் பெற்ற அதிகாரிகள் ஆகியோர் நடைமுறையைப் பின்பற்றவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News