தமிழக சட்டசபை சபாநாயகர்-துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்வு..!

தமிழக சட்டசபையின் சபாநாயகர், துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2021-05-11 08:24 GMT

அப்பாவு மற்றும் பிச்சாண்டி

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக பிச்சாண்டி ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சட்டசபையின் சபாநாயகராக அப்பாவு,  துணை சபாநாயகராக பிச்சாண்டி ஆகியோர் பதவியில் இருப்பார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News