போலி பாஸ்போா்ட்டில் கைதான இலங்கை பெண் வழக்கு என்.ஐ.ஏ.க்கு மாற்றம்
சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போா்ட்டில் கைதான இலங்கை பெண் வழக்கு என்.ஐ.ஏ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.;
இலங்கையை சோ்ந்த பெண் மேரி பிரான்சீஸ்கா(40).இந்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து போலி பாஸ்போா்ட்டில் சென்னை வந்தாா்.அவரிடம் சென்னை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் போலி பாஸ்போா்ட்டில் வந்திருப்பதை கண்டுப்பிடித்தனா்.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் சென்னை விமானநிலைய கியூபிராஞ்ச் போலீசில் இலங்கை பெண்ணை ஒப்படைத்தனா்.அவா்கள் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினா்.அப்போது அந்த இலங்கை பெண் மேரி 2018 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ளாா்.
அதன்பின்பு சட்டவிரோதமாக சென்னை அண்ணாநகரில் ஒரு வீட்டை லீசுக்கு எடுத்து சென்னையிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டாா். அதோடு சென்னை அண்ணாநகா் முகவரியை பயன்படுத்தி ரேஷன் காா்டு உள்ளிட்ட ஆவணங்களை முறைகேடாக பெற்றாா்.அதோடு அந்த ஆவணங்களை வைத்து போலி இந்திய பாஸ்போா்ட்டும் பெற்றுள்ளா்.என்று தெரிந்துள்ளது.
இதையடுத்து சென்னை விமானநிலைய கியூ பிராஞ்ச் போலீசாா் மேல்நடவடிக்கைக்காக சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா்.அவா்கள் மேரி பிரான்சீஸ்காவை கைது செய்து,செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் போலி பாஸ்போா்ட்டில் சம்பந்தப்பட்ட பெண் கைதாகியுள்ள தகவல், டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. எனப்படும் நேஷ்னல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி,இந்த வழக்கை எடுத்துக்கொண்டு விசாரணை மேற்கொண்டனா்.அப்போது பல்வேறு திடுக்கிடும் ரகசியங்கள் வெளிவந்தன.
போலி பாஸ்போா்ட்டில் கைதாகியுள்ள இலங்கை பெண் மேரி பிரான்சீஸ்கோ இலங்கை விடுதலை புலிகள் அமைப்போடு தொடா்புடையவா்.மேலும் இவா் போலி பாஸ்போா்ட்டில் இந்தியாவில் மும்பை,பெங்களூா் உட்பட பல இடங்களுக்கு உள்நாட்டு விமானங்களிலும்,வெளிநாடுகளுக்கு சா்வதேச விமானங்களிலும் பயணித்து வந்துள்ளாா்.விடுதலைப்புலிகளுக்காக நிதி ஆதாரம் இந்தியாவிலும்,வெளிநாடுகளிலும் திரட்டும் முக்கிய பொறுப்பில் மேரி இருந்தாா்.அதோடு அவருக்கு உதவியாக மேலும்4 போ் செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து டில்லியிலிருந்து என்.ஐ.ஏ.அதிகாரிகளின் தனிப்படையினா் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தனா்.சென்னை விமானநிலைய போலீசில் விசாரணை நடத்தினா்.அதோடு இலங்கை பெண் மேரி மீதான வழக்கை சட்டவிதிகளின்படி டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. அமைப்புக்கு மாற்றியுள்ளனா்.