அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை திட்டம்: மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அர்ச்சகர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.;
தமிழகத்தில் பூசாரிகள், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று ரூ.4,000 உதவித்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 12,959 கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் சுமார் 14 ஆயிரம் பேருக்கு ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.