தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நடக்குமா? அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

தமிழகத்தில் +2 தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2021-06-04 11:45 GMT

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலக கூட்டரங்கில் தொடங்கியது.

முன்னதாக தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பில், கல்வியாளர்கள், பெற்றோர்கள் 60 % பேர் தேர்வை நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலக கூட்டரங்கில் +2 பொதுத்தேர்வு குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பிளஸ் 2 தேர்வு குறித்த அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கவுள்ளதாகவும் அதன் பின்னர் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News