பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.;
சென்னை: பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
முன்னதாக மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் அளித்த ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செல்லிடப்பேசி விளையாட்டுகளை தடை செய்யக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாணவர்கள், செல்லிடப்பேசியில் மூழ்கிவிடுவதால் அதிக கோபம், தற்கொலை எண்ணம் வருகிறது என்று குறிப்பிட்டனர்.
மேலும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் பேசுவது குறைந்து வருகிறது. எனவே, பெற்றோர்கள் நேரம் செலவிட்டு தங்களது பிள்ளைகளுடன் பேச வேண்டும். பிள்ளைகளுடன் நேரம் செலவிட்டால், செல்லிடப்பேசியில் மூழ்குவது தவிர்க்கப்படும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளனர்.