கருப்புபூஞ்ஜை நோயால் தமிழகத்தில் உயிரிழப்பில்லை: சுகாதாரத்துறை செயலர்
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.;
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கருப்பு பூஞ்சை நோயால் மக்கள் பதட்டமடைய வேண்டாம். இது கொரோனாவுக்கு முன்னரே கண்டறியப்பட்ட நோய். நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்ட் மருந்து எடுத்து கொள்வதால் இந்த நோய் ஏற்படுகிறது.
இந்த கருப்பு பூஞ்சையை அறிவிக்கப்பட்ட வேண்டிய நோய் என்றும், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்..
மேலும், தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 9 பேர் கருப்பு பூஞ்ஜை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்பு பூஞ்ஜை நோயால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இறந்தவரின் நுரையிரலில் 80% தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது..
கருப்பு பூஞ்ஜை நோயை கட்டுபடுத்த 5 ஆயிரம் தடுப்பு மருந்துகள் வரும் திங்கட்கிழமை வரவிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் இந்த நோய் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டவர்களின் விவரங்களை அரசிடம் வழங்க வேண்டும்.
கொரோனா நோய் தாக்கத்தில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் இரண்டு வாரம் பின்தங்கி இருப்பதாகவும், ஊரடங்கு தளர்வு நேரங்களில் மக்கள் கூட்டமான இடங்களை தவிர்க்க வேண்டும் .
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கினாலும் மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், பொது மக்கள் இதற்கான இணையதளத்தில் முன்பதிவு செய்தால் தான் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்..