மதுரை ஆதீனம் மறைவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நேற்று இரவு காலமானார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
பைல் படம்
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் :
ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுச் செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.