சென்னையில் போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய வழக்கறிஞர் கைது

மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி நான்கு பேர் படுகாயமடைய காரணமான உயர் நீதிமன்ற வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-25 09:48 GMT

பைல் படம்.

சென்னை எழும்பூர், காசா மேஜர் சாலையில், நேற்று இரவு அதிவேகமாகவும், தாறுமாறாகவும் 'பென்ஸ்' சொகுசு கார் சென்றது. டான் பாஸ்கோ பள்ளி அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனம், ஒரு ஆட்டோவில் மோதியதுடன், எதிர் திசையில் வந்த டாடா நானோ கார் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில், கல்லுாரி மாணவர்கள் இருவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். அண்ணாசதுக்கம் போலீசார், அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அண்ணாநகர், 8வது பிரதான சாலையைச் சேர்ந்த, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மதுபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.,வில் நடந்த மது விருந்திற்கு சென்ற அவர், முழு போதையில் வாகனத்தை ஓட்டி வரும் போது, விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அவரிடம் நடத்திய சோதனையில், அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை கைது செய்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News