உள்ளம் நிறைந்த கலைஞரை இல்லத்திலேயே கொண்டாடுவோம்: மு.க.ஸ்டாலின் கடிதம்
கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை இல்லத்திலேயே கொண்டாடுவோம் என்று மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.;
தமிழகத்தில் வரும் ஜூன் 3 முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
இக் கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆகவே தமிழக மக்கள் தங்கள் உள்ளம் நிறைந்த கலைஞரை நம் இல்லத்திலே கொண்டாடுவோம்.
மக்களின் உயிரை காப்பதே கருணாநிதி பிறந்தநாளுக்கு சிறப்பு சேர்ப்பதாகும். கருணாநிதி பிறந்தநாளில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கிடுங்கள்.
மேலும் இது பேரிடர் காலம் என்பதால் மக்களின் உயிரை காப்பதே நம் கலையாய பணி எனவும் தெரிவித்து உள்ளார்.