பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமிதா நீக்கம் ?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமிதா நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.;
விஜய் டிவி'யில் ஒளிபரப்பாகி வரும், 'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியில் இந்த முறை பெண்கள் அதிகளவில் பங்கேற்க, திருநங்கை நமிதா மாரிமுத்துவும் பங்கேற்றார். தனது திருநங்கை வாழ்க்கை குறித்து நமிதா பேசியது, பலரது பாராட்டையும், அனுதாபத்தையும் பெற்றது.
இதன் தாக்கம் குறைவதற்குள், சக போட்டியாளர் தாமரைச் செல்விக்கும் நமிதாவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு பெரிதானது. பிக்பாஸ் வீட்டில் இருந்த பொருட்களை துாக்கியெறிந்து, நமிதா ரகளை செய்ததாக கூறப்படுகிறது. நமிதாவை, பிக்பாஸ் அணி சமாதானப்படுத்த முயற்சி செய்தபோதிலும் பலனளிக்காத காரணத்தால் அவருக்கு 'ரெட் கார்டு' வழங்கப்பட்டு நமிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டதாக தகவல் பரவுகிறது. அதே நேரத்தில், தவிர்க்க முடியாத காரணத்தால் நமிதா, அவராகவே வெளியேறியதாகவும் அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்.