நாளை முதல் முழு ஊரடங்கு ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை
நாளை முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.;
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மருத்துவ நிபுணர் குழுவுடனும், சட்டமன்ற கட்சி உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புதிய முழு ஊரடங்கு உத்தரவை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 24-ம் தேதி காலையில் இருந்து இந்த முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.