விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

இறந்தவர் குடும்பத்தினருக்கு 3 லட்சமும் காயமடைந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது;

Update: 2023-01-19 15:15 GMT

பைல் படம்

விருதுநகர் மாவட்டம், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தில் இயங்கி  வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை   எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் திருத்தங்கல்லைச் சேர்ந்த  குருசாமி மகன் ரவி, (60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில் படுகாயம டைந்த அதே பகுதியைச் சேர்ந்த  ஆசீர்வாதம் மகன் சாமுவேல் ஜெயராஜ்(48) என்பவருக்கு அரசு மருத்து வமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று லட்ச ரூபாயும் காயமடைந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News