சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலை துாரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியானது
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதுாரக் கல்வி நிறுவனத்தில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதுாரக் கல்வி நிறுவனத்தில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதுாரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளது. இந்தப் படிப்புகளுக்கான தேர்வு கடந்த 2020ம் ஆண்டில் டிசம்பர் மாதம் இறுதியில் தேர்வுகள் நடந்தது.
தொலைதுார இளங்கலை,டிப்ளமோ, நுாலக மேலாண்மைப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியானது.இதனை ideunom.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண்ணைப் பதிவிட்டு, தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
மேலும் முதுகலை, எம்பிஏ, எம்சிஏ தொலைதுாரப் படிப்புகள் வருகிற ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் வெளியாகும் என்று சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதுாரக் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.