ஊரடங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழகத்தில் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதி ஏற்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;

Update: 2021-06-01 05:18 GMT

தமிக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவிக்கையில், ஊரடங்கால் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் கொரோனா பரவலுக்கும் நாம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

 ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா 2 வது நிவாரணத் தொகை ரூ 2000 விரைவில் வழங்கப்படும். ஆகவே கொரோனாவை ஒழிப்போம். நமக்கான வளம் மிகுந்த தமிழகத்தை அமைப்போம் என முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

Tags:    

Similar News