தென்சென்னை கோட்டூரில் கொரோனா நிவாரண உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கல்
தென்சென்னை மாவட்டம் கோட்டூரில் கொரோனா நிவாரண உதவிகளை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்.
தென்சென்னை மாவட்டம் கோட்டூர் கண்பார்வையற்ற மாற்று திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலதிட்ட உதவிகளை சேப்பாக்கம்-திருவல்லிகேனி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிஸ்டாலின் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் அழைப்பாளர்களாக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் A.M.V.பிரபாகர் ராஜா, உதயநிதி ரசிகர் மன்றத்தின் மாநில செயலாளர் P.K.பாபு, மாநில பொருளாளர் A.ராஜா, மாநில துணை செயலாளர்கள் G.Mகலிம், R.ராஜ்குமார், வில்ஸ்டோ மற்றும் மாவட்ட செயலாளர் ராம் மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர் மாவட்ட துணை மற்றும் பகுதி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.