கொரோனா: இந்தியாவில் குறைகிறது... தமிழகத்தில் நீடிக்கிறது...

கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் குறையாமல் அதிகரித்து வருகிறது.

Update: 2021-05-17 04:52 GMT

கோப்பு படம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி மூன்று லட்சதத்தை தாண்டியது. அன்று 3.14 லட்சமாக பாதிப்பு பதிவானது. அதன்பின்பு படிப்படியாக உயா்ந்து ஏப்ரல் 30 ஆம் தேதி பாதிப்பு 4 லட்சத்தைத் (4.01 லட்சம்) தாண்டியது.மே 7 ஆம் தேதி அதிக உச்சமாக 4.14 லட்சமாகப் பதிவானது.

அதன் பின்னர் படிப்படியாக பாதிப்பு குறைந்துவருகிறது. இன்று இந்தியாவில் பாதிப்பு 2,81,386.இது ஒரளவு ஆறுதலை அளித்தாலும்,உயிரிழப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் உயிரிழப்பு 4,106.தொடா்ந்து 4 நாட்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.இது அனைவரையும் கவலையடைய செய்துள்ளது.

இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும்,தமிழகத்தில் தொடா்ந்து பாதிப்பு ஏறிக்கொண்டிருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் பொதுமக்கள் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளை சரவர கடைப்பிடிக்காமல்,ஊரடங்கையையும் மதித்து நடக்காததே  என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News