சென்னை: பொதுமக்களுக்கு நேரடியாக முகக்கவசம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் 10-க்கு மேற்பட்ட இடங்களில். 2 முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று, பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.;
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று சென்னையில் பல்வேறு இடங்களில், நேரடியாக மக்களுக்கு ஓமந்துாரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பேருந்து நிலையம், ரிச்சி தெரு அருகில், காஸ்மொபோலிடன் கிளப் அருகில், ஸ்பென்சர் பிளாசா எதிரில், ஆயிரம் விளக்குப் பகுதி, சேப்பாக்கம், தேனாம்பேட்டை சித்தி விநாயகர் கோயில் தெரு, எல்டாம்ஸ் சாலை சிக்னல், எஸ்.ஐ.இ.டி. கல்லுாரி பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கும் நேரில் சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் முகக்கவசங்களை வழங்கி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது பொதுமக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார். பொதுமக்களும் அரசு எடுத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.