ஒளிப்பதிவு சட்டம் அரசியல் பழிவாங்கலா ? உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
ஒளிப்பதிவு திருத்தச்சட்ட மசோதா படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது.எனவே,பாசிச போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,
"ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021 படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது. தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.