சேப்பாக்கம் : சிதிலமடைந்த குடியிருப்பு பகுதிகளை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆய்வு
சேப்பாக்கத்தில் சிதலமடைந்த குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திட்டப் பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள குடியிருப்புகளை அகற்றி
மறுகட்டுமானம் திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது பள்ளி சிறுமி ஒருவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.