நிவாரணம் பெற திருநங்கையருக்கு சென்னை கலெக்டர் அழைப்பு

கொரோனா நிவாரணத் தொகை பெறாத திருநங்கையர், நாளைக்குள், சென்னை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.;

Update: 2021-09-13 04:55 GMT

பைல் படம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால் சிரமப்படும் திருநங்கையருக்கு, இரண்டு கட்டமாக, ரூ.2,000 கொரோனா நிவாரணத் தொகை வழங்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி, சமூக நலத்துறையின் வாயிலாக அடையாளம் காணப்பட்ட திருநங்கையருக்கு, நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாவட்டத்தில் இதுவரை நிவாரணத் தொகை பெறாத திருநங்கையர், நாளைக்குள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் இவ்வாறு சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News