சென்னை சேப்பாக்கம் தொகுதி சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும்பணி

சென்னை சேப்பாக்கம் தொகுதி சார்பில் தட்டுப்பாட்டை போக்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2021-05-28 03:26 GMT

சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி சார்பில்  ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது. இதில் எம்எல்ஏ உதயநிதி, தயாநிதி மாறன் எம்பி உள்ளனர்.

 உலகத்தையே நடுங்கவைக்கும் கொரோனா தொற்று நோய் காரணமாக கொத்து கொத்தாக இறப்புகள் ஏற்பட்டு வருகின்ற சூழ்நிலையில் நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை போக்க சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 ஆக்சிஜன் சிலிண்டர்  சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட உள்ளது.

மொத்தமாக 120 ஆக்ஸிஜன் செறியூட்டிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட உள்ளன. தற்போது மட்டுமே நான்கு தொகுதிகளிலும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இருக்கிற தொகுதியில் கொடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மட்டும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியிலும்,  மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி, துறைமுகம் சட்டமன்றத் தொகுதி' மற்றும் திரு வி க நகர் சட்டமன்றத் தொகுதிகளில் தலா 20 ஆக்சிஜன் செறியூட்டிகள் வழங்கப்பட உள்ளன.

Tags:    

Similar News