சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி: தமிழக அரசு ஆலோசனை

சத்துணவு திட்டத்தில் முட்டையுடன் சேர்த்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

Update: 2021-08-16 05:45 GMT

பைல் படம்.

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசுப்பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இந்த திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.800 கோடி வரை செலவிடுகிறது.

தற்போது பள்ளிகள் மூடியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அரசின் சார்பில் அரிசி உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் குடும்ப பொருளாதார சூழலால் மாணவர்களின் இடை நிற்றலும் அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி வழங்கலாமா? என்று தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சத்துணவு திட்டத்தில் முட்டையுடன் சேர்த்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News