உதவி பொறியாளர் பணிக்கு பணி ஆணை : முதல்வர் வழங்கினார்..!

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி ஆணைகளை வழங்கினார்.

Update: 2024-09-23 08:54 GMT

கோப்பு படம் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் 48 உதவிப் பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மே 2021 முதல் இன்று வரை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, கள உதவியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களில் மொத்தம் 167 பேர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர், வனத்தொழில் பழகுநர், உதவியாளர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்கு 154 பேர்களும், கருணை அடிப்படையில் 164 பேர்களும், என மொத்தம் 318 பேர்கள் பணிநிமயனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 308 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணியிலிருந்து வனக்காவலர்களாக பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

உதவி பொறியாளர்களின் முக்கிய பொறுப்புகள்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் உதவி பொறியாளர்களின் முக்கிய பணிகள்:

தொழிற்சாலைகளின் இசைவாணை விண்ணப்பங்களை பரிசீலித்தல்

தள ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்தல்

புதிய தொழிற்சாலைகள் மற்றும் இசைவாணையின்றி இயங்கும் தொழிற்சாலைகளை கண்டறிதல்

கழிவுநீர் மாதிரிகள் சேகரித்து ஆய்வகங்களுக்கு அனுப்புதல்

காற்று மாசு அளவீடுகளை மேற்கொள்ளுதல்

இந்த பணி நியமனங்கள் மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், ஐஏஎஸ்., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், ஐஏஎஸ்., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் விஜயந்திர சிங் மாலிக், ஐஎப்எஸ் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி) மீதா பானர்ஜி, ஐஎப்எஸ்., தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் ஆர். கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News