மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்வு: மத்திய அமைச்சர் தகவல்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.;
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு என ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17% இருந்து 28 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.