சென்னை- செங்கோட்டை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
சென்னை- செங்கோட்டை மார்க்கமாக இரயில்கள் இயக்கப்படுவதில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாம்பரம் இரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக ரத்து, பகுதியான ரத்து மற்றும் வழித்தட மாற்றம் குறித்த விபரங்கள்: சென்னை-செங்கோட்டை வண்டி எண்: 12661 வரும் 15.08.24 அன்று விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.
16.08.24 மற்றும் 17.08.24 தேதிகளில் சென்னை - செங்கல்பட்டு இடையே ரயில் ரத்து செய்யப்படுகிறது. மாறாக இந்த ரயில் செங்கல்பட்டிலிருந்து செங்கோட்டைக்கு கிளம்பும்.
செங்கோட்டை-சென்னை வண்டி எண்:12662 14.08.24 to 17.08.24-ம் தேதி வரை செங்கோட்டையிலிருந்து கிளம்பும் வண்டி செங்கல்பட்டு - சென்னை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும்.
சிலம்பு அதிவிரைவு வண்டியான சென்னை-செங்கோட்டை வண்டி எண்:20681 16.08.24 அன்று விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். 17.08.24ம் தேதி அன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கோட்டை-சென்னை வண்டி எண்:20682 வரும் 15.08.24-ம் தேதி செங்கோட்டையிலிருந்து கிளம்பும் வண்டி விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்து செல்லும். இந்த ரயிலும் 17.08.24 முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
கொல்லம் விரைவு ரயிலான சென்னை-கொல்லம் வண்டி எண்: 16101 15.08.24 16.08.24 & 17.08.24 விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.
கொல்லம்-சென்னை வண்டி எண்:16102 17.08.24-ம் தேதி கொல்லத்திலிருந்து கிளம்பும் வண்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக மாற்றுப்பாதையில் சென்னை எழும்பூர் செல்லும். தாம்பரம் செல்லாது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.