ஆல் பாஸ் ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்
அரியர் தேர்வு ரத்து செய்து "ஆல் பாஸ்" என அறிவித்த தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.;
கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து கடந்த அக்டோபர் மாதம் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அரியர் தேர்வு ரத்து செய்து "ஆல் பாஸ்" என அறிவித்து, பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. கல்வியின் புனிதத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.