சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்

பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டுக்கான கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் தொடங்கியது

Update: 2022-04-09 05:32 GMT

சென்னை மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடைசியாக 2016ஆம் ஆண்டு தாக்கலானது. அதன் பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நேரடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது 6 ஆண்டுகள் கழித்து மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு சென்னை மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2022-2023 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று காலை தாக்கலாகிறது.

Live Updates
2022-04-09 05:55 GMT

கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு நிதி ரூ. 30 லட்சத்திலிருந்து ரூ. 35 லட்சமாக உயர்வு

2022-04-09 05:54 GMT

சென்னை மாநகராட்சி சாலைகள், தெருக்களின் பெயர்களை டிஜிட்டல் முறையில் மாற்ற ரூ. 8.43 கோடி ஒதுக்கீடு

2022-04-09 05:38 GMT

சிறப்பு மருத்துவ முகாம்கள்

சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்

2022-04-09 05:36 GMT

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலினசமத்துவக் குழுக்கள் உருவாக்கப்படும்.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இணையதள இணைப்பு ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு

2022-04-09 05:34 GMT

பட்ஜெட் துளிகள்: மாதவரத்தில் பயோ கேஸ் ஆலை விரைவில் திறக்கப்படும்

திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் துப்புரவு பணியாளர்களுக்கு கொடுப்பனவுகளாக விநியோகிக்கப்படும்

54,000 மெட்ரிக் டன் தேங்காய் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்

Tags:    

Similar News