சென்னை மாநகராட்சியில் விதிகளை மீறிய 382 கடைகளுக்கு சீல்!
கொரோனா ஊரடங்கை மீறிய 382 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.;
கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்தது. கொரோனா தொற்றின் வேகம் குறையாததால் ஊரடங்கை சற்று கடுமையாக்கியது.
இதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் கொரோனா வழிமுறைகளை மீறி செயல்பட்டதாக, சென்னையில் ஒரு மாதத்தில் மட்டும் 382 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிநபர், நிறுவனம் என ஊரடங்கு விதிகளை மீறியோரிடம் இருந்து ஒரு மாதத்தில் மட்டும் 1.63 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.