சென்னையில் ஒரேநாளில் 1,500டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர் தகவல்

சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,500 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2021-05-25 08:35 GMT

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஒரு வாரத்துக்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மளிகை கடை, காய்கறிகடைகளும் மூடப்பட்டன. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி கஷ்டப்படக்கூடாது என்பதற்காக நடமாடும் காறிகறிகள், பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் இயக்கப்பட்டன.

இதுதொடர்பாக வேளாண்மைத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவிக்கையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,500 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது

தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி, குறைந்த விலையில் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் 4,900 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News