தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களிக்காதது, அக்கட்சியினர் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமாக சாலிகிராமத்தில் உள்ள காவிரி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் விஜயகாந்த் வாக்களிப்பது வழக்கம்.ஆனால், இந்த முறை, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மட்டும் காலையில் வந்து தனது வாக்கினை செலுத்திவிட்டு, தான் போட்டியிடும் விருத்தாச்சலத்துக்குக் கிளம்பிவிட்டார். பிறகு அவரது மகன்கள் வந்து வாக்களித்தனர். அப்போது விஜயகாந்த் மாலையில் வந்து வாக்களிப்பார் என்று கூறினர். ஆனால் கடைசி வரை அவர் வாக்களிக்க வரவில்லை.
உடல் நலக் குறைவு மற்றும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் அவர் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்பட்டாலும், தங்களது கட்சித் தலைவர் வாக்களிக்காதது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.