சென்னையில் வாயில் கருப்புத்துணி கட்டி பாஜகவினர் மவுன போராட்டம்

வாயில் கருப்புத்துணி கட்டி, சென்னை பாஜக அலுவலகத்தில், அக்கட்சியினர் மௌன அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-12-13 00:30 GMT

கமலாலயத்தில் போராட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர். 

கருத்து சுதந்திரம் மற்றும் எழுத்துரிமையை மறுக்கும் காவல்துறையை கண்டித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சி சார்பில் நேற்று  மௌன அறப்போராட்டம் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியின் தகவல்தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போராட்டத்திற்கு, தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் நிர்மல் குமார், ஊடகப் பிரிவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போல தமிழகம் முழுவதும்,  ஒவ்வொரு மாவட்டத்தின் பாஜக அலுவலகத்திலும் சமூக ஊடகப் பிரிவின் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி மௌன அறப் போராட்டம் நடத்தப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் பாஜக மாநிலத் தலைவர் நிர்மல்குமார் பேசுகையில், இது, முதல் கட்ட போராட்டம் மட்டுமே. தமிழக அரசும் தமிழக காவல்துறையும் இதுபோல் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை தொடரும் பட்சத்தில், தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டால், அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags:    

Similar News