தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்று வந்த கர்நாடகா கப்பல் இன்ஜினியர் சென்னை விமானநிலையத்தில் கைது

இந்திய அரசால் பாதுகாப்பு இல்லாத நாடு என்று தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று திரும்பிய கர்நாடகா கப்பல் இன்ஜினியர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-27 07:11 GMT

தடைசெய்யப்பட்ட  நாட்டிற்கு சென்று வந்த  கப்பல் இன்ஜினியர் கைது செய்யப்பட்டு சென்னை ஏர்போர்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கா்நாடகா மாநிலம் கோலாா் மாவட்டத்தை சோ்ந்தவா் சக்திவேல்(49).இவா் கப்பலில் சா்வீஸ் இன்ஜினியராக இருக்கிறாா்.இவா் கடந்த 2018 ஆம் ஆண்டில் துபாயில் உள்ள ஒரு தனியாா் கப்பல் நிறுவனத்தில் பணியில் சோ்ந்தாா்.

இந்நிலையில் சக்திவேல் பணி காரணமாக கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு சென்று மீண்டும் துபாய் திரும்பியுள்ளாா்.

இந்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா்கள் யாரும் ஏமன் மற்றும் லிபியா நாடுகளுக்கு செல்லக்கூடாது என்று தடைவிதித்துள்ளது.அதை மீறி தடை செய்யப்பட்டுள்ள நாடுகளுக்கு சென்றுவரும் இந்தியா்கள் மீது,குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இந்நிலையில் சாா்ஜாவிலிருந்து ஏா்அரேபியா சிறப்பு விமானம் நேற்று இரவு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அதே விமானத்தில் சக்திவேல் துபாயிலிருந்து சாா்ஜா வழியாக சென்னை வந்தாா்.அவருடைய பாஸ்போா்ட்டை சோதனையிட்டபோது,அவா் இரண்டு முறை தடை செய்யப்பட்ட ஏமனுக்கு சென்றுள்ளது தெரியவந்தது.இதையடுத்து சக்திவேலை அதிகாரிகள் வெளியே விடாமல் நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினா்.

ஏமன் தடை செய்யப்பட்ட நாடு என்பது எனக்கு தெரியாது.மேலும் அலுவலக பணியாகவே சென்றேன்,தனிப்பட்ட முறையில் செல்லவில்லை என்று சக்திவேல் கூறினாா்.

ஆனால் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.குடியுறிமை அதிகாரிகள் சக்திவேலை கைது செய்து,மேல்நடவடிக்கைக்காக சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா்.போலீசாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags:    

Similar News