தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ராஜினாமா

Update: 2021-05-03 08:51 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ராஜினாமா செய்துள்ளார்.

சென்னை இந்திய சட்ட நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினராகக் கடந்த 2012-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட விஜயநாராயணன் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச்செயலர் மற்றும் சட்டத்துறை செயலாளருக்கு விஜயநாராயணன் அனுப்பி வைத்துள்ளார்.

Tags:    

Similar News