வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியின் பயன்பாடுகள் - தேர்தல் ஆணையம் அறிவுப்பு!

Update: 2021-03-29 07:41 GMT

வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியை தேர்தல் ஆணையம் பல்வேறு சேவைகளை வாக்காளர்கள் பெறும் வகையில் வடிவமைத்துள்ளது. அதன்படி, இந்த செயலியைப் பயன்படுத்தி ஒருவர் தனது வாக்காளர் அடையாள ரசீதை பதவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தனது செல்லிடப்பேசியில் உள்ள மற்ற எண்களுக்கு, தனது வாக்காளர் அடையாள ரசீதை பகிர்ந்து கொள்ளவும் முடியும். புதிய வாக்காளர்கள் தமது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

இதுமட்டுமின்றி வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கும் சேவையைப் பெறலாம். வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்யலாம்.வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றங்கள் செய்த பிறகு, புதிய வாக்காளர் அட்டைக் கோரி விண்ணப்பிக்கலாம். தங்களது விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.மேலும் கட்சி வாரியாகவும் தொகுதி வாரியாகவும் தேர்தல் முடிவுகளை அறியலாம்.

நாட்டில் இதுவரை 1.9 கோடி பேர் தங்களது செல்லிடப்பேசியில் இந்த வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News